News April 18, 2024
சரித்திரம் படைத்த டெல்லி கேபிடல்ஸ்

GT அணிக்கு எதிரான போட்டியில் 8.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் DC அணி வென்றது. இதன் மூலம் 67 பந்துகள் மீதமிருந்த நிலையில் 92 ரன்கள் எடுத்து இந்த சீசனில் பந்துகள் அடிப்படையில், DC அணி வெற்றியைப் பதிவு செய்தது. 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் DC பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக 2022இல் PBKSக்கு எதிராக 57 பந்துகள் மீதமிருந்த நிலையில் DC அணி வெற்றி பெற்றது.
Similar News
News January 28, 2026
தைப்பூசம் விடுமுறை.. வெள்ளி முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. ஜன.30, 31, பிப்.1-ல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. <
News January 28, 2026
சில பூச்சிகள் ரீங்காரம் இடுவது ஏன்?

தேனீ, சில வண்டுகளின் இறக்கைகள் நொடிக்கு சுமார் 150-250 தடவை சிறகடிக்கின்றன. காற்றின் உராய்வு அதிர்வினால் நமக்கு இந்த ஒலியானது ரீங்காரமாக கேட்கிறது. இதுவே ஒரு வண்ணத்து பூச்சியாக இருந்தால் எதுவும் கேட்காது. அதன் சிறகுகள் நொடிக்கு 6-10 தடவை மட்டுமே சிறகடிக்கின்றன. இதே கொசுக்கள் என்றால், அவை நொடிக்கு சுமார் 400-800 முறை சிறகடிப்பதால் காதின் அருகில் வந்தால் மட்டுமே ’கொய்ங்’ என்ற சப்தம் கேட்கிறது.
News January 28, 2026
விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

தேர்தலையொட்டிய கட்சித் தாவல் நிகழ்வுகளால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், அதிமுகவின் அரியலூர் முகமாக இருந்த கவிதா G.ராஜேந்திரன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக அரியலூர் மாவட்டச் செயலாளர், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.


