News October 25, 2025
தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு அக்.26 மற்றும் 27 தேதிகளில் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் வழியாக செல்ல தூத்துக்குடி மாவட்ட காவல் துறையால் கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, உவரி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அறிவிக்கபட்டு மாற்று பாதைகளில் செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளார். SHARE!
Similar News
News October 26, 2025
சூரசம்காரத்திற்காக 17 வாகனம் நிறுத்தும் இடங்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 27 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனையொட்டி 26,27 தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக 17 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு வீரபாண்டிய பட்டினத்தில்ஒரு வாகன காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு சிறப்பு பேருந்துகள் நிறுத்துவதற்கு தனியாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
சூரசம்ஹாரம் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பக்தர்கள் அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அன்று தனிநபர் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
தூத்துக்குடி: போஸ்ட் ஆபீஸ் வங்கி வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <


