News October 25, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 41 மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் இதற்கான நேரடி மாணவர் சேர்க்கை நவ.14ந் தேதி வரை நடைபெறும். இதில் சேர்க்கப்படும் மாணவர்கள் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். கூடுதல் தகவலுக்கு 04286-294940.
Similar News
News October 26, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 25) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 26) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 26, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.25 நாமக்கல்-( தங்கராஜ்- 9498110895 ), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 25, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (25.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


