News October 25, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைகிறார்

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, அன்புமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். பின்னர், ராமதாஸையும் சந்தித்து பேசியிருந்தார். இதனிடையே, ‘மாம்பழம்’ சின்னமும் அன்புமணியின் வசம் வந்துள்ள நிலையில், வெற்றி வாய்ப்புள்ள 30 தொகுதிகளை அவர் பட்டியலிட்டு லிஸ்ட்டையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 25, 2025
90’s கிட்ஸ் Dude திரைப்படங்கள்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி உள்ள ‘Dude’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது Gen Z தலைமுறையினருக்கான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இதனால், இதேபோன்று கதை அம்சம் கொண்ட 90’s கிட்ஸ்களின் Dude திரைப்படங்கள், SM-யில் டிரெண்டாகி வருகின்றன. அவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். இதில், உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 25, 2025
FLASH: தங்கம் விலை ₹4,000 குறைந்தது

கிடுகிடுவென உயர்ந்த <<18097995>>தங்கம் விலை<<>>, இந்த வாரம் தடாலடியாக சரிந்துள்ளது. இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவுக்கு வந்த நிலையில், 22 காரட் தங்கம் 1 சவரன் ₹92,000-க்கு விற்பனையாகி வருகிறது. இது கடந்த வாரத்தை விட ₹4,000 குறைவு. வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த வாரத்தில் வெள்ளி கிலோவுக்கு ₹20,000 குறைந்து ₹1.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது. நாளை விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இருக்காது.
News October 25, 2025
சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள்

2025-ம் ஆண்டில் சுற்றுலா செல்ல சிறந்த டாப் 10 நாடுகளின் தரவரிசையை, ஃபோர்ப்ஸ் ஆஸ்திரேலியா, கயாக் உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத நாடு, முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டுக்கு சென்றுவர செலவுகளும் குறைவுதான். வெளிநாடு சுற்றுலா விரும்பிகள் நம்பர் 1 நாட்டிற்கு சென்று என்ஜாய் பண்ணுங்க. மேலும், அது எந்த நாடு என்று, மேலே உள்ள போட்டோஸை பார்த்து கமெண்ட்ல சொல்லுங்க.


