News October 25, 2025
சர்க்கரை நோய்க்கு இந்த ஜூஸ்கள் பெஸ்ட் சாய்ஸ்

* வாரத்திற்கு 2 முறை பாகற்காய் ஜூஸ் குடித்தால், உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.*நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. மேலும், இதனை வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். * மாதுளை, கேரட், தக்காளி தர்பூசணி, சாத்துக்குடி போன்ற ஜூஸ்களை தாராளமாக குடிக்கலாம்.
Similar News
News October 26, 2025
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு

தனியார் பல்கலை. திருத்த சட்ட முன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். புதிதாக தனியார் பல்கலைக்கழங்கள் தொடங்குவதற்கும் தற்போதுள்ள சில வழிமுறைகளை எளிமைப்படுத்தப்பட வேண்டு என்ற நோக்கத்திற்காக இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதேசமயம் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் நலன் எந்த வகையில் இதனால் பாதிக்காது எனவும் விளக்கியுள்ளார்.
News October 26, 2025
மீண்டும் அமெரிக்க அதிபர் ரேஸில் கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபராக இருப்பார் என தெரிவித்த அவர், அது தானாக கூட இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். 2028 தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் தான் பின்தங்கியிருப்பதாகக் கூறும் கருத்துக் கணிப்புகளை பற்றி கவலையில்லை எனவும் குறிப்பிடுள்ளார்.
News October 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 500 ▶குறள்: காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.▶பொருள்:வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.


