News October 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 499 ▶குறள்: சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. ▶பொருள்:பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
Similar News
News October 25, 2025
இதெல்லாம் இந்தியா தந்த பரிசு

பண்டைய கால இந்திய கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன உலகிலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் சில கண்டுபிடிப்புகள், உலகளவில் பரவலாக பயன்பாட்டில் உள்ளவை. இதேபோன்று, வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News October 25, 2025
நிதிஷை CM வேட்பாளராக மோடி அறிவித்தது ஏன்?

பிஹார் NDA சிஎம் வேட்பாளராக நிதிஷை நீண்ட இழுபறிக்கு பிறகு மோடி அங்கீகரித்துள்ளார். பாஜக வியூகத்தை மாற்றிய பின்னணி: *JD(U) வலுவிழந்த போதும், நிதிஷ் மீது பொது வாக்காளர்களுக்கு உள்ள அபிமானம் * யாதவ் தவிர்த்த OBC–க்களை கவர்வதற்கு பாஜகவில் நிதிஷ் அளவுக்கு பிரபலமான உள்ளூர் தலைவர்கள் இல்லாதது * ரொம்பவும் நெருக்கினால், தேர்தலுக்கு பிறகு நிதிஷ் மகாகத்பந்தன் அணிக்கு தாவிவிடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு.
News October 25, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை காலமானார்

9-1-1: Nashville டிவி தொடர் மூலம் உலகளவில் பிரபலமான நடிகை இசபெல் தாட்(23) இளம் வயதில் உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. charcot-marie-tooth disease நோயால் கால் நரம்பு பாதிக்கப்பட்டு வீல் சேரில்தான் அவரது இறுதி நாள்களை கழித்துள்ளார். மேலும், அவரது நுரையீரல், இதயமும் பாதிக்கப்பட்டு இசபெல் தாட் உயிர்பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


