News October 25, 2025
உடல் வலிகளுக்கு சிறந்த ஆசனங்கள்

அன்றாட உடல் வலிகளுக்கு எளிய யோகா ஆசனங்கள் பயனளிக்கும். ஒவ்வொரு ஆசனமும் உங்கள் தசைகளை தளர்த்தவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மருந்துகள் இல்லாமல் இயற்கையாகவே வலியைக் குறைக்கிறது. என்ன பிரச்னைக்கு, என்ன ஆசனம் செய்யலாம் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்க நண்பர்களுக்கு share பண்ணுங்க.
Similar News
News January 30, 2026
காலை நேரத்தில் இந்த உலர் பழங்களை சாப்பிடாதீங்க!

காலை வெறும் வயிற்றில் சில உலர் பழங்களை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் உலர்ந்த அத்திப்பழம் செரிமான கோளாறு மற்றும் வயிற்று அசெளகரியம் தரலாம். பேரீச்சம்பழம் அதிக சர்க்கரை இருப்பதால் காலை சாப்பிடுவது நல்லதல்ல. உலர் திராட்சை செரிமானத்திற்கு கடினமாக இருக்கலாம். ஆப்ரிகாட் காலை நேரத்தில் வயிற்றுக்கு ஏற்றதல்ல. எனினும் இந்த உலர் பழங்களை பகல் நேரத்தில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
News January 30, 2026
கூட்டணியை உறுதி செய்யும் EPS

விரைவில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என EPS தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதனை உறுதி செய்வதாகவே EPS பேச்சு பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸை நம்பாதீங்க என விஜய்யை சமீபத்தில் விஜய பிரபாகரன் எச்சரித்திருந்தார். அதாவது காங்., இருக்கும் கூட்டணியில் தேமுதிக இருக்காது என்பதே அதன் மறைமுக குறியீடாம்.
News January 30, 2026
விஜய்யை இயக்கும் மிஷனரி கொள்கை ஆசான் யார்? பாஜக

ஊழல் காங்கிரஸோடு இணைவதற்கு அழுத்தம் கொடுத்து, நடிகர் விஜய்யை இயக்கும் மிஷனரி கொள்கை ஆசான் யார் என பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மலேசியாவில் விஜய் ரகசியமாக சந்தித்த திரை மறைவு லண்டன் தொழிலதிபரா, விஜய்யின் அப்பா சந்திரசேகரா என்று குறிப்பிட்டுள்ள அவர், தவெக ஆதவ்வின் கொள்கை ஆசான் திருமாவளவன் என்றால், தவெக தொண்டர்களுக்கு யார் கொள்கை ஆசான் என்றும் கேட்டுள்ளார்.


