News October 25, 2025
வங்கிக் கணக்கில் ₹2000… முக்கிய அறிவிப்பு

விவசாயிகளுக்கான PM கிசான் திட்ட 21-வது தவணை ₹2000, அடுத்த ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முறைகேடாக உதவித்தொகை பெற்றுவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டோர், 18 வயது நிறைவடையாதவர்கள், நில உரிமையை உறுதிப்படுத்தாதவர்கள் என சுமார் 41 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் பெயரை <
Similar News
News October 25, 2025
BREAKING: புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே அக்.28 மாலை அல்லது இரவில் Montha புயல் கரையை கடக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
News October 25, 2025
இந்தியாவின் மிக பணக்கார ஸ்கூல்கள் இவைதான்!

கல்வியும், மருத்துவமும் நாட்டில் இலவசம் என்றாலும், குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பெற்றோர்கள் பெரும் பணத்தை செலவு செய்கின்றனர். அந்த வகையில், 2025 – 26 ஆண்டு கல்வி கட்டணத்தின் அடிப்படையில் நாட்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஸ்கூல்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பாருங்க.
News October 25, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது புதிய அறிவிப்பு

வேலூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தேனியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நிறைவடைந்துவிட்டது. அதேநேரம் இம்மாவட்டங்களில் நவ.14-க்குள் கலெக்டர் ஆபிஸில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே, வரும் 28-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்களை அறிய <


