News October 25, 2025

திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 25, 2025

33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

image

திருவாரூர் மாவட்டம் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோயிலில் (அக்.25) சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆஞ்சநேயர், சீதா, லட்சுமணர் அனுமன் சமேத கோதண்டராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News October 25, 2025

திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> [CLICK HERE]<<>>
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 25, 2025

திருவாரூர்: 2 லட்சம் டன் நெல் கொள்முதல்

image

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை இரண்டு லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று 24.10.2025 மட்டும் 6000 மெட்ரிக் டன் கொள்முதல் மையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று பத்தாயிரம் மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!