News October 25, 2025
திருச்சி: கல்விக்கடன் முகாமில் ரூ.7.35 கோடி கடன் வழங்கல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவம், பிசியோதெரபி, பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட கல்லூரிகளில் பயின்று வரும் 109 மாணவர்களுக்கு, பல்வேறு வங்கிகளின் சார்பில் ரூ.7.35 கோடி மதிப்பிலான கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
திருச்சி: இரிடியம் விற்பதாக மோசடி- சிபிசிஐடி விசாரணை

திருச்சி, மருங்காபுரி அருகே உள்ள நெல்லிப்பட்டியைச் சேர்ந்த நல்லமுத்து, சியாமளா தம்பதியினர் இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சிபிசிஐடி போலீசார் நேற்று அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்காக தம்பதியினரை சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News October 25, 2025
திருச்சி: ரயில்வேயில் வேலை.. APPLY NOW!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் முதல் <
News October 25, 2025
திருச்சி: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

திருச்சி மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..


