News October 25, 2025

தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீருடன் இறுதி அஞ்சலி

image

நடிகை மனோரமாவின் ஒரே மகனும் நடிகருமான பூபதி(70) சென்னையில் நேற்று காலமானார். அம்மா பயன்படுத்திய கட்டிலிலேயே அவரது உயிர் பிரிந்தது பெரும் சோகம். தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பூபதி உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான பூபதி பல படங்களில் நடித்திருந்தார். RIP

Similar News

News October 25, 2025

டிகிரி போதும்.. வங்கியில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

image

UCO வங்கியில் 532 Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 20 – 28 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகையாக ₹15,000 வழங்கப்படும். இதற்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து அக்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 25, 2025

சமையல் எண்ணெயை ரீயூஸ் பண்றீங்களா?

image

சமையல் எண்ணெயை ரீயூஸ் செய்வது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. மனிதர்களுக்கு இதய நோய், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சுத்திகரிக்கப்படாத எண்ணெயை கொட்டுவதால் நிலம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று FSSAI-க்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

News October 25, 2025

அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

அதிமுக உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி செய்துள்ளார். சென்னையில் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த தமாகா பொதுக்குழுவில், அதிமுக தலைமையில் 2026 தேர்தலை சந்திப்போம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், திமுகவுக்கு எதிரான கொள்கை உடைய அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!