News October 25, 2025
செல்வப்பெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர்

செம்பரம்பாக்கம் ஏரியை அத்தொகுதியின் MLA ஆன தன்னிடம் சொல்லாமல் திறந்ததற்காக நீர்வளத்துறை அதிகாரிகளை <<18077962>>செல்வப்பெருந்தகை<<>> சாடினார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை போன்ற கட்சி தலைவர்கள் கடுமையான பேசியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையை தெரிந்து கொண்டு அவர் பேச வேண்டும் எனவும், சின்ன சின்ன நீர் திறப்புகளுக்கு எல்லாம் MLA-வை கூப்பிடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News October 25, 2025
டிகிரி போதும்.. வங்கியில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

UCO வங்கியில் 532 Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 20 – 28 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகையாக ₹15,000 வழங்கப்படும். இதற்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News October 25, 2025
சமையல் எண்ணெயை ரீயூஸ் பண்றீங்களா?

சமையல் எண்ணெயை ரீயூஸ் செய்வது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. மனிதர்களுக்கு இதய நோய், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சுத்திகரிக்கப்படாத எண்ணெயை கொட்டுவதால் நிலம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று FSSAI-க்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
News October 25, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி செய்துள்ளார். சென்னையில் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த தமாகா பொதுக்குழுவில், அதிமுக தலைமையில் 2026 தேர்தலை சந்திப்போம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், திமுகவுக்கு எதிரான கொள்கை உடைய அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


