News October 25, 2025
பேப்பரில் பொட்டலம் கட்டிய உணவுகளை சாப்பிடலாமா?

செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டப்படும் உணவுப் பொருள்களை உட்கொள்வது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என FSSAI எச்சரித்துள்ளது. நாளிதழ்களில் அச்சிடும் மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், பேசிலஸ் நுண்ணுயிரியல் தாக்குதலும் குடற்புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இதன் காரணமாகவே உணவுப் பொருள்களை பேக்கிங் செய்வதற்கும், பாதுகாத்து வைப்பதற்கும் தாள்களை பயன்படுத்த வேண்டாமென FSSAI அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 25, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி செய்துள்ளார். சென்னையில் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த தமாகா பொதுக்குழுவில், அதிமுக தலைமையில் 2026 தேர்தலை சந்திப்போம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், திமுகவுக்கு எதிரான கொள்கை உடைய அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
News October 25, 2025
₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா?

சினிமாவில் முதலில் ₹1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ சிரஞ்சீவி. ஆனால் நடிகை யாரென்று தெரியுமா? இந்தியாவில் ஹீரோக்களுக்கு போட்டியாக முதல் முதலாக ₹1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் ஸ்ரீதேவி. 1993-ம் ஆண்டு வெளியான ‘ரூப் கி ராணி சொரோம் கா ராஜா’ படத்திற்காக இவர் ₹1 கோடி சம்பளம் பெற்றார். இந்த படத்தை தயாரித்தவர் அவரது கணவரான போனி கபூர் தான். இந்த படத்தில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார்.
News October 25, 2025
நிதிஷ் குமாரை பாஜக கடத்தி சென்றுவிட்டது; தேஜஸ்வி

NDA கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்க மாட்டார்கள் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். NDA கூட்டணி தற்போது நிதிஷ் கட்டுப்பாட்டில் இல்லை; அவர் பிஹாருக்கு வெளியில் இருந்து செயல்படும் மோடி, அமித்ஷாவால் கடத்தப்பட்டுள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளியாட்களுக்கு வாக்களிக்காமல், ஒரு பிஹாரிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


