News October 24, 2025
சற்றுமுன்: பிரபலம் காலமானார்

பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மலேசியா பாஸ்கர் காலமானார் . பாடிகார்ட், சாம்ராஜ்ஜியம், பாக்ஸர், உள்பட 250+ மலையாள படங்களிலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். திரையில் ‘Fight – Malaysia Bhaskar’ என்று பார்த்ததுமே ரசிகர்களின் கைத்தட்டல், விசில் பறக்கும் அளவுக்கு மலையாளத்தில் பிரபலமான இவர், மலேசியாவில் தமிழ் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
Similar News
News October 25, 2025
ஒரே அடியாக ₹36,000 விலை குறைந்தது.. CLARITY

வெள்ளியின் விலை ஒரு வாரத்தில் ₹36,000 குறைந்த நிலையில், <<18097995>>இன்று(அக்.25) மாறாதது<<>> முதலீட்டாளர்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது. தீபாவளிக்கு முன்பு தங்கத்துடன் போட்டி போட்டு கொண்டு வெள்ளி விலை உயர்ந்ததால் பலரும் அதில் முதலீடு செய்ய தொடங்கினர். வெள்ளி விற்று தீர்ந்ததால் பலரும் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், அதன் பின்னர் ஏற்பட்ட சரிவுக்கான காரணம் என்ன என்பதை அறிய மேலே போட்டோக்களை SWIPE செய்யுங்க.
News October 25, 2025
TTV பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்: RB உதயகுமார்

CM வேட்பாளராக EPS-ஐ விஜய் ஏற்க மாட்டார், EPS தான் தவெகவை நாடிச் செல்ல வேண்டாம் என்று TTV தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், TTV குறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று RB உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். ஊடக வெளிச்சத்துக்காகவே TTV இவ்வாறு பேசி வருவதாகவும், அவரைப் பற்றி அதிமுகவினர் பேச வேண்டாம் என்று EPS அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News October 25, 2025
33 years of ‘தேவர் மகன்’

தமிழ் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை உண்டாக்கிய ‘தேவர் மகன்’ வெளிவந்து இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிவாஜி, கமல், நாசரின் அசத்தலான நடிப்பு, இசைஞானியின் இசை, பரதனின் இயக்கம் என இந்த படம், காலம் கடந்து கொண்டாடப்படுகிறது. சாதிய பெருமையை பேசும் படம் என ஒருதரப்பினர் விமர்சித்தாலும், ‘புள்ளைங்கள படிக்க வைங்கடா, நம்ம மாதிரி ஆகாம இருக்கட்டும்’ என கிளைமாக்ஸில் பதிலடி கொடுத்திருப்பார் எழுத்தாளர் கமல்.


