News October 24, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் புகார் குழு கட்டாயம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் & தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்-2013 படி உள்ளக புகார் குழு அமைத்து, விவரங்களை SHE BOX இணையதளத்தில் பதிவேற்றி, மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தவறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
திண்டுக்கல்லில் ஆரி, எம்பிராய்டரி கற்க சூப்பர் சான்ஸ்!

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் (EDII) நடத்தும் ஒரு நாள் ஆரி, எம்பிராய்டரி பயிற்சி வகுப்பு அக்டோபர் 29ஆம் தேதி திண்டுக்கல், வேதாத்திரி நகரில் உள்ள பேஷன் அகாடமி & தையல் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. இதில், மானியத்துடன் கடனுதவி பெற வழிகாட்டுதலும், பயிற்சி அன்று காலை சிற்றுண்டியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: 8220624867, 9487614828 அழைக்கவும். இதனை ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
திண்டுக்கல்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

திண்டுக்கல் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
திண்டுக்கலில் சிறப்பு வார்டு கூட்டங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தின் திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டங்கள் அக்டோபர் 27, 28, 29 தேதிகளில் நடைபெறுகின்றன. பொதுமக்கள், நலச்சங்கத்தினர் கலந்து கொண்டு குடிநீர், சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கருத்துகளை முன்வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.


