News October 24, 2025

சேலையில் ருக்மிணி வசந்த்

image

ருக்மிணி வசந்த், ‘மதராஸி’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவரது சமீபத்திய சமூக ஊடக பதிவுகளில், சேலையில் இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. காந்தாரா படத்தில் இளவரசி கனகவதியாக கலக்கிய ருக்மிணி, அதே காஸ்டியூமான சேலையை அணிந்து தொடர்ச்சியாக போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Similar News

News October 25, 2025

வங்கிக் கணக்கில் ₹2000… முக்கிய அறிவிப்பு

image

விவசாயிகளுக்கான PM கிசான் திட்ட 21-வது தவணை ₹2000, அடுத்த ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முறைகேடாக உதவித்தொகை பெற்றுவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டோர், 18 வயது நிறைவடையாதவர்கள், நில உரிமையை உறுதிப்படுத்தாதவர்கள் என சுமார் 41 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் பெயரை <>PM KISAN<<>> இணையதளத்தில் செக் செய்துகொள்ளவும்.

News October 25, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News October 25, 2025

CONG-க்கு மரியாதை கொடுத்தால் உழைப்போம்: MP

image

காங்கிரஸுக்கு உரிய மரியாதை அளிப்பவர் தான் தமிழ்நாட்டின் CM ஆக முடியும் என அக்கட்சி MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மரியாதை கொடுக்காதவர்கள் எதிர்க்கட்சி தலைவராகவே திருப்தி அடைய வேண்டியதுதான் எனவும், உரிய மரியாதை அளித்தால் ராகுல், பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸில் குரல் எழுந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!