News October 24, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. காலையில் ₹320 அதிகரித்த நிலையில், மாலையில் ₹1,120 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், 1 சவரன் ₹91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 25, 2025

மழை சீசனுக்கு தேவையான ‘தங்க கசாயம்’

image

★தேவையானவை: மஞ்சள் தூள், பனை சர்க்கரை, பால், சுக்கு, மிளகு, திப்பிலி ★செய்முறை: முதலில் பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும். அது பொங்கி வந்ததும் வடிகட்டி எடுத்து அதில், மஞ்சள் தூள், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றுடன் தேவைக்கேற்ப பனை சர்க்கரை சேர்த்தால், தங்க கசாயம் ரெடி. சளி, காய்ச்சல் இருப்பவர்கள் குடித்துவர, காய்ச்சல் குணமாகி, சளி தொல்லையில் இருந்தும் விடுபடலாம். SHARE IT.

News October 25, 2025

FLASH: உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. நேற்று(அக்.24) காலை வர்த்தகத்தில் ஏற்றத்தில் இருந்த தங்கம் மாலையில் சுமார் 75 டாலர்கள் (₹6,586) சரிந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) 16 டாலர்கள் சரிந்து $4,113 ஆக நீடிக்கிறது. இதனால், இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 7 நாள்களில் நம்மூரில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

News October 25, 2025

எலி காய்ச்சல்: மழைநீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம்

image

TN-ல் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேங்கியுள்ள மழைநீரில் வெறும் கால்களில் நடக்க வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நடப்பாண்டில் 1,500-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய்கள், பன்றிகள், எலிகளின் கழிவுகளில் இருந்து ‘Leptospira’ தொற்று பரவுவதால் வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு கை, கால்களை நன்னீரில் சோப்பு போட்டு கழுவுவது சிறந்தது.

error: Content is protected !!