News October 24, 2025

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று இன்று (அக் -24) வெளியிட்டுள்ளது. கனரக வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பாரம் ஏற்றி செல்ல வேண்டாம். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால் ஏற்றிச்செல்லும் வாகனம் மற்றும் சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் என்பதால் காவல்துறை அதிக பாரம் வேண்டாம் என்ன செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு.

Similar News

News October 25, 2025

செங்கையில் பரவி வரும் டெங்கு ; உஷார்!

image

வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் நிலையில், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 பேருக்கு இருந்த பாதிப்பு, தற்போது 60க்கும் மேல் பதிவாகி வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் பாதிப்பு, இரட்டிப்பாகும் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News October 25, 2025

செங்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

image

செங்கல்பட்டு : மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், அச்சிறுமி ஒருமுறை ஆட்டோவை ஓட்டிப் பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அப்போது அச்சிறுமிக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்த டிரைவர் பாலியல் சீண்டல் செய்ததாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.

News October 25, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (அக்டோபர்-24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!