News October 24, 2025

கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (24.10.2025) மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இ.ஆ.ப., தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன், கு.விமல்ராஜ் (நிலமெடுப்பு), குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ இ.ஆ.ப., மற்றும் இணை இயக்குநர் (வேளாண்மை) சிங்காரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News October 25, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர்மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025ம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி (31.10.2025) கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/தனியார் 6 முதல் 12 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தனித்தனியே பேச்சுப்போட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04324- 255077 தொடர்பு கொள்ளலாம்.

News October 25, 2025

கரூரில் 157 ஊராட்சிகளுக்கு கிராமசபை கூட்டம்!

image

கரூரில் கிராம ஊராட்சி நிர்வாகம், மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 01.11.2025 அன்று 157 ஊராட்சிகளுக்கு கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News October 24, 2025

நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வு

image

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து கரூர் மாவட்டத்தில் 25.10.2025 நாளை (சனிக்கிழமை) நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வானது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வழிபாட்டுதலங்கள், மற்றும் சந்தை வளாகங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு அறிவித்துள்ளார்.

error: Content is protected !!