News October 24, 2025
அமெரிக்காவுக்கு இவ்வளவு கடனா… நம்ப மாட்டீங்க!

உலகின் பணக்கார நாடாக கருதப்படும் அமெரிக்கா தான், உலகிலேயே அதிக கடனாளி நாடு தெரியுமா? ஆம், அமெரிக்காவின் தேசிய கடன் தற்போது ₹3,339 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இது இந்தியா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, UK ஆகிய நாடுகளின் மொத்த பொருளாதாரங்களின் அளவாகும். இதன்படி பார்த்தால், ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும், சுமார் ₹1 கோடி கடன் உள்ளது. அதிபர் டிரம்ப் பதவியேற்ற பின், ₹175 லட்சம் கோடி கடன் உயர்ந்துள்ளது.
Similar News
News October 25, 2025
FLASH: உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. நேற்று(அக்.24) காலை வர்த்தகத்தில் ஏற்றத்தில் இருந்த தங்கம் மாலையில் சுமார் 75 டாலர்கள் (₹6,586) சரிந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) 16 டாலர்கள் சரிந்து $4,113 ஆக நீடிக்கிறது. இதனால், இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 7 நாள்களில் நம்மூரில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
News October 25, 2025
எலி காய்ச்சல்: மழைநீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம்

TN-ல் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேங்கியுள்ள மழைநீரில் வெறும் கால்களில் நடக்க வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நடப்பாண்டில் 1,500-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய்கள், பன்றிகள், எலிகளின் கழிவுகளில் இருந்து ‘Leptospira’ தொற்று பரவுவதால் வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு கை, கால்களை நன்னீரில் சோப்பு போட்டு கழுவுவது சிறந்தது.
News October 25, 2025
கூட்டணிக்கு வர விஜய்க்கு நேரடியாக அழைப்பு விடுத்தார்

NDA கூட்டணியில் தவெகவை சேர்க்க அடுத்தடுத்து பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அண்மையில், அதிமுக EX அமைச்சர் RB உதயகுமார் மறைமுகமாக விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே, அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் AC சண்முகம், வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால், பலமான கூட்டணியாக இருக்கும் எனவும், ஆட்சி மாற்றம் உறுதி என்றும் கூறியுள்ளார்.


