News October 24, 2025

ALERT: மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்க

image

வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என IMD அறிவித்துள்ளது. அப்பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், வரும் 28-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 25, 2025

சிட்னி கிரவுண்டும்.. Hitman ரெக்கார்டும்!

image

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ODI போட்டி இன்று சிட்னியில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 5 ODI போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய ஓபனர் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரைசதங்கள் என மொத்தம் 333 ரன்களை குவித்துள்ளார். சிட்னியில் தனது அபாரமான பேட்டிங்கை ரோஹித் இன்றும் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சோபிப்பாரா Hitman?

News October 25, 2025

நோயில்லா வாழ்க்கை வாழ…

image

விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நமது உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சுவாச மண்டலத்தை சிறப்பாக இயங்கச் செய்யும். காலை நேரத்தில் யோகா, நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், தியானம் போன்ற சுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பயிற்சிகளை செய்யலாம். இதனால், மனமும், உடலும் புது சக்தி பெற்று, நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.

News October 25, 2025

BREAKING: இடத்தை மாற்றினார் விஜய்

image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய்க்கு இதுவரை யாரும் இடம் தரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் கூறவிருப்பதாக செய்தி வெளியானது. இது அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால், பனையூருக்கு பதில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் அக்.27-ம் தேதி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறவிருக்கிறார்.

error: Content is protected !!