News October 24, 2025
பருவமழை, புயல்: CM முக்கிய ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி புயலும் உருவாக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலான கனமழைக்கு வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இதுவரையிலான பாதிப்புகள் குறித்து CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News October 25, 2025
TN-ல் மழைக்கு 31 பேர் பலியாகியுள்ளனர்: KKSSR

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
News October 25, 2025
விஜய்யிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்?

2024-ல் தவெக உதயம், புத்தக விழா ஒன்றில் திருமாவுக்கு தூதுவிட்ட விஜய், 2025-ல் கட்சியின் ஓராண்டு நிறைவு, வீட்டிற்கு வரவைத்து வெள்ள நிவாரணம், 3 சனிக்கிழமைகள் பரப்புரை, 2 முறை கல்வி விருதுகள் என விஜய்யின் அரசியல் நுழைவை சுருக்கிவிடலாம். இந்த ஒன்றரை வருடத்தில் ஒருமுறை கூட செய்தியாளர்களை விஜய் சந்திக்கவில்லை (பின்னால் வர வேண்டாம் என கூறியது தவிர). இனி விஜய் ஊடகங்களை சந்தித்தால் என்ன கேள்வி கேட்கலாம்?
News October 25, 2025
டிகிரி போதும்.. வங்கியில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

UCO வங்கியில் 532 Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 20 – 28 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகையாக ₹15,000 வழங்கப்படும். இதற்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


