News October 24, 2025

சென்னை: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சென்னை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9500190590-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 24, 2025

மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தல்!

image

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை காசிமேடு மற்றும் பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் புயல் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி வருகின்றனர். மேலும் மீனவர்கள் சங்கத்தினர் விசைப்படகு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தினர்.

News October 24, 2025

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

சென்னையில் நாளை (அக்.25) அனைத்து பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை அட்டவணைப் படி பணி நாளாக செயல்படும் என முதன்மை கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். தீபாவளிக்கு அக்.21 அன்று அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News October 24, 2025

சென்னை: மின் தடையா..? உடனே CALL!

image

சென்னை மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!