News October 24, 2025

சாவின் விளிம்புக்கு சென்றேன்: திலக் வர்மா

image

2022-ல் சாவின் விளிம்புக்கு சென்றதாக திலக் வர்மா கூறியுள்ளார். ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர உடற்பயிற்சி செய்ததால், ‘Rhabdomyolysis’ என்னும் தசை சிதைவு நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச A அணியுடனான போட்டியின் போது, கை விரல்கள் இயங்காமல் போக, ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளார். அப்போது, சற்றே தாமதித்திருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என டாக்டர் தெரிவித்ததாக அவர் கூறினார்.

Similar News

News October 24, 2025

மழையை எதிர்கொள்ள தயார்: கே.என்.நேரு

image

சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த அவர், தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். CM உத்தரவின் பேரில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

News October 24, 2025

Dejavu ஏற்படுவது எப்படி தெரியுமா?

image

புதிதாக நடக்கும் ஒரு சம்பவத்தை பார்க்கும்போது, ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது தான் Dejavu. இது மூளையில் ஏற்படும் சிறிய சிக்னல் பிழையால் நடக்கிறது. அதாவது, புதிதாக ஒரு சம்பவம் நடக்கும்போது அதை hippocampus பகுதி Store செய்து வைக்கும். அப்போது உங்கள் மூளை, இதை ஏற்கனவே பார்த்ததுபோல தவறான சிக்னல் அனுப்புவதால் hippocampus பகுதி குழம்புகிறது. இதனால்தான் உங்களுக்கு Dejavu ஏற்படுகிறது. SHARE.

News October 24, 2025

சேலையில் ருக்மிணி வசந்த்

image

ருக்மிணி வசந்த், ‘மதராஸி’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவரது சமீபத்திய சமூக ஊடக பதிவுகளில், சேலையில் இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. காந்தாரா படத்தில் இளவரசி கனகவதியாக கலக்கிய ருக்மிணி, அதே காஸ்டியூமான சேலையை அணிந்து தொடர்ச்சியாக போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

error: Content is protected !!