News October 24, 2025

மீண்டும் ரஞ்சி தொடரில் ஜடேஜா!

image

உலகின் பெஸ்ட் ஆல்ரவுண்டரான ஜடேஜா, ரஞ்சி தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார். நாளை தொடங்கவுள்ள ம.பி., அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவுள்ளார். அடுத்து தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகும் விதமாக ஜடேஜா இந்த போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Similar News

News October 25, 2025

PHOTOS: அஜித் நெஞ்சில் கடவுள் டாட்டூ

image

கார் ரேஸில் தீவிரமாக உள்ள அஜித் இப்போது இந்தியா திரும்பியுள்ளார். விரையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதனிடையே கேரளா பாலக்காட்டில் உள்ள கோவிலுக்கு அஜித் சென்ற போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. முக்கியமாக அதில் அஜித் நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூ கவனம் பெற்றுள்ளது. தனது குல தெய்வமான பகவதி அம்மனை டாட்டூவாக அஜித் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

News October 25, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 499 ▶குறள்: சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. ▶பொருள்:பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

News October 25, 2025

NATIONAL ROUNDUP: தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

image

*ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளன. *காற்று மாசு அதிகரிப்பால், டெல்லியில் காற்று சுத்திகரிப்பான், முகக்கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. *ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
* ₹256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

error: Content is protected !!