News October 24, 2025
பிஹாரில் மோடி இன்று பரப்புரை

பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், NDA, INDIA கூட்டணி தலைவர்கள் பம்பரம் போல், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராயில் இன்று நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.
Similar News
News October 25, 2025
கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதி

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, மத்திய அரசு தரப்பில் ₹2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களின் வங்கி கணக்கில் ₹2 லட்சத்தை மத்திய அரசு செலுத்தியுள்ளது. ஏற்கெனவே TN அரசு ₹10 லட்சமும், விஜய் ₹20 லட்சமும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
News October 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 25, ஐப்பசி 8 ▶கிழமை:சனி ▶நல்ல நேரம்:7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்:1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News October 25, 2025
₹4000 கோடி நிதியை வீணடித்த திமுக: H.ராஜா

தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மாநிலத்தின் வளர்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக H.ராஜா விமர்சித்துள்ளார். விவசாயிகள் நெல்லை பாதுகாக்க நிரந்தரக் கிடக்கு கூட திமுக அரசு 4 ஆண்டுகளில் அமைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு கொடுத்த ₹4,000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியை அரசு சரியாக பயன்படுத்தவில்லை எனவும் சாடியுள்ளார்.


