News October 24, 2025
தஞ்சாவூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு தஞ்சாவூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04362-230776) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Similar News
News October 25, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
தஞ்சை: ரயில்வேயில் சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு இங்கே<
இதனை உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 24, 2025
தஞ்சாவூர்: 80 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, அமெரிக்க தூதரகம் ஆகியவை சார்பில் நேற்று 2030-ஆம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு இலக்கு குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி பகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 80 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறையின் திருச்சி இணை ஆணையர் வி.லீலாவதி தெரிவித்தார்.


