News October 24, 2025

மதுரை: 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..மாணவி கண்கள் தானம்

image

அலங்காநல்லுார் அடுத்த கொண்டையம்பட்டி இந்திரா நகர் கூலித்தொழிலாளி சதீஷ்குமாரின் மகள் சர்மிளா 16. அரசு பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி.அக்.,19 இரவு வீட்டில் துாங்கிய போது பாம்பு கடித்தது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று காலை இறந்தார். மாணவியின் கண்களை பெற்றோர் தானம் செய்தனர்.

Similar News

News October 25, 2025

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 25, 2025

மதுரை டிராவல்ஸ் ஓனர் சேலத்தில் தற்கொலை

image

மதுரை, ஊத்தங்குடி, வள்ளல் நகரை சேர்ந்தவர் திவாகர், 29. சொந்தமாக டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதுதொடர்பாக அக். 20ல், சேலம் வந்த அவர், சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.அன்று இரவு துாங்கச்சென்ற அவர், நேற்று முன்தினம் முதல், வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் பசீர் அகமது, அறைக்கு சென்று பார்த்தபோது, திவாகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

News October 25, 2025

மதுரையில் தொழில் துவங்க விரும்பினால் ரூ.10 லட்சம் மானியம்

image

மதுரையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை துறைகளில் புத்தாக்க (புதிய) நிறுவனங்கள் தொழில் துவங்க விரும்பினால் மானியம் அளிக்கப்படும்.புதிய யூனிட்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம், ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிலை விரிவுபடுத்தி சந்தைப்படுத்த நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் வரை மானியம் உண்டு. வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். புதிய தொழில் துவங்க நினைப்போருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!