News October 24, 2025
சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தலா?

சேங்கமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவால் அந்த தொகுதி காலியாகி உள்ளது. பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர், ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அல்லது பதவி விலகிவிட்டால் பொதுவாக 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். எனினும், தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
Similar News
News October 25, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) நாமக்கல் கிளை கூட்டம் இன்று (அக். 24) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 25) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 25, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.24 நாமக்கல்-( தேசிங்கன் – 8668105073) ,வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 25, 2025
நவ. 4-இல் நாமக்கல்லில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நவ. 4-ஆம் தேதி தமிழக பாஜக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினாா் நாகேந்திரன் பங்கேற்கும், ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் வருகையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகளில் நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


