News October 24, 2025
பழநியில் பெட்ரோல் குண்டு வீச்சு; மூவர் தப்பியோட்டம்!

பழநி சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மதுரையை சேர்ந்த ஹரிமணி (18), அவரது நண்பர்கள் முத்துக்குமார் (19), கவுதம் (19) ஆகியோர் வந்து மதுபோதையில் தகராறு செய்துள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசி, அங்கிருந்த கார் மற்றும் பேக்கரி ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 25, 2025
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
திண்டுக்கல்: பயிர் காப்பீடு பிரச்சார வாகனம் துவக்கம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (24.10.2025) மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, பயிர் காப்பீடு திட்ட பிரச்சார வாகனத்தை SBI General Insurance மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இணை இயக்குநர் அ.பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் நாகேந்திரன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
News October 24, 2025
பிரதம மந்திரி கல்வி உதவி கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல்: பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப அவகாசம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை தாண்டக்கூடாது. கடந்தாண்டு பயனடைந்தவர்கள் விண்ணப்பத்தை https://scholarships.gov.in இணையதளத்தில்
புதுப்பிக்கலாம்.


