News April 17, 2024

கடலூரில் ரூ.9.50 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 17, 18, 19-ந்தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இதனால் 3 நாட்கள் கடைகள் திறக்கப்படாது என்பதால், நேற்று கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் ரூ.9.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

Similar News

News January 23, 2026

கடலூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

image

கடலூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.!

News January 23, 2026

கடலூர்: விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

image

வேப்பூர் அருகே ஐவதகுடியில் நேற்று மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(51). அரசு பள்ளி ஆசிரியரான இவர் சென்ற கார், தடுப்பு கட்டையில் மோதி எதிர் திசையில் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 கார்களும் கடுமையாக சேதமடைந்தது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கிய ஆரோக்கியதாஸ் சம்பவத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் கிராமப்புற திறன் பயிற்சி 2.0 திட்டத்தில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு, நிரந்தரமான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!