News October 24, 2025
அக்.31 கடைசி அறிவித்தார் கரூர் கலெக்டர்!

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டமான PM-YASASVI-Top Classes Education in schools for OBC, EBC & DNT students-இன் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
கரூரில் 157 ஊராட்சிகளுக்கு கிராமசபை கூட்டம்!

கரூரில் கிராம ஊராட்சி நிர்வாகம், மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 01.11.2025 அன்று 157 ஊராட்சிகளுக்கு கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News October 24, 2025
நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வு

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து கரூர் மாவட்டத்தில் 25.10.2025 நாளை (சனிக்கிழமை) நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வானது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வழிபாட்டுதலங்கள், மற்றும் சந்தை வளாகங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு அறிவித்துள்ளார்.
News October 24, 2025
கரூர்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <


