News October 24, 2025

வெயிட்டை குறைக்க ‘Green’ டீ குடிப்பவரா நீங்க?

image

எடை குறைக்க விரும்புபவர்கள், க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அது மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் என்பதால், டாக்டர்களும் க்ரீன் டீயை பரிந்துரைப்பார்கள். ஆனால், அதே நேரத்தில் இந்த டீயை அதிகம் குடிப்பதால், உடல்நல பிரச்னைகள் வரலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு, கல்லீரல் பாதிப்பு & தூக்கமின்மை ஆகிய ஏற்படலாம் என கூறப்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சே!

Similar News

News October 25, 2025

ஆசியக் கபடிப் போட்டியில் அசத்திய தமிழக வீரர்!

image

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்று மன்னார்குடியை சேர்ந்த இளம் வீரர் அபினேஷ் மோகன்தாஸ் அசத்தியுள்ளார். அவருக்கு அமைச்சர் TRB ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், ‘ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற எங்கள் மின்னும் மன்னை வடுவூர் வீரர் அபினேஷ் மோகன்தாஸ்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார். நாமும் வாழ்த்துவோம்..!

News October 25, 2025

பாஜக அபார வெற்றி

image

ஜம்மு காஷ்மீர் ராஜ்யசபா தேர்தலில், ஒரு இடத்தில் பாஜக வேட்பாளர் சத் பால் சர்மா சர்ப்ரைஸாக அபார வெற்றி பெற்றுள்ளார். அதுவும், சட்டமன்றத்தில் பாஜகவிற்கு இருக்கும் பலத்தை விட 4 வாக்குகள் கூடுதலாக பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். NC வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பாஜகவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர். வாக்களித்தது ஆளும் கட்சியினரா, மாற்றுக்கட்சி MLAக்களா என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.

News October 25, 2025

விஜய் கட்சியில் வெடித்த மோதல்

image

கரூர் துயரத்துக்கு பின் விஜய் வெளியில் தலைகாட்டாமல் மௌனமாக உள்ளார். இதனிடையே தவெகவின் உள்கட்சி பூசல் பூதாகரமாக மாறியுள்ளது. கரூர் சம்பவத்தை அடுத்து N.ஆனந்த் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் மற்றும் டிரால்கள் வந்தன. ஆனால் தவெக ஐடி விங்கை கண்ட்ரோலில் வைத்துள்ள ஆதவ், ஆனந்துக்கு ஆதரவாக செயல்படவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

error: Content is protected !!