News October 24, 2025
குல்தீப் இல்லாதது தான் தோல்விக்கு காரணம்?

நேற்றைய போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். ஆல்ரவுண்டர்களான சுந்தர் & நிதிஷ் ரெட்டி ஆகியோர் பெரிய தாக்கத்தை பவுலிங்கில் கொடுக்கவில்லை. இவர்களில் யாராவது ஒருவருக்கு பதிலாக அணியில் குல்தீப் இருந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News October 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 25, 2025
CONG-க்கு மரியாதை கொடுத்தால் உழைப்போம்: MP

காங்கிரஸுக்கு உரிய மரியாதை அளிப்பவர் தான் தமிழ்நாட்டின் CM ஆக முடியும் என அக்கட்சி MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மரியாதை கொடுக்காதவர்கள் எதிர்க்கட்சி தலைவராகவே திருப்தி அடைய வேண்டியதுதான் எனவும், உரிய மரியாதை அளித்தால் ராகுல், பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸில் குரல் எழுந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
நெல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்

ஜப்பான், சவுதி, ஈராக், சீனா உள்ளிட்ட 26 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக, இந்திய அரசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தேவ் கார்க் தெரிவித்துள்ளார். மேற்கூறிய நாடுகள் ₹1.80 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா அல்லாத பிற நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா 172 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.


