News October 24, 2025

நெல்லை: திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்டம் சார்பில் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 26ம் தேதி பிற்பகல் முதல் 28ம் தேதி வரை 220 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நெல்லை உள்ளிட்ட தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். திருச்செந்தூர் செல்லும் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Similar News

News October 25, 2025

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு மத்திய கருவிகளுக்கான மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் இரண்டு பேரும் திட்ட உதவியாளர்களும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வித் தகுதி மற்றும் விவரங்களுடன் இணையத்தில் வெளியிட்டுள்ள சான்றுகளுடன் வருகின்ற 29ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். ஷேர்!

News October 25, 2025

நெல்லை: தந்தைக்கு கத்திக்குத்து – மகன் வெறிச்செயல்

image

நெல்லை, மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் நேற்று முன்தினம் திடீரென தனது தந்தை முருகனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 25, 2025

நெல்லை: விவசாயிகளுக்கு கலெக்டர் குட் நியூஸ்

image

கலெக்டர் சுகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தாண்டு தற்போது வரை 21,177.92 மெ.டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மழையால் அம்பை பாளை மானூர் பகுதியில் நெல் பயிர் சேதமடைந்துள்ளதால் 80-க்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். சேத விபர அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!