News October 24, 2025

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன்

image

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், கடந்த ஜூன் மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை HC இருவருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 24, 2025

தீபாவளியில் ISIS தாக்குதல்: திட்டம் முறியடிப்பு

image

தீபாவளியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததை டெல்லி போலீசார் முறியடித்துள்ளனர். இதுதொடர்பாக 2 ISIS பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் மால் மற்றும் பூங்காவில், அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News October 24, 2025

சற்றுமுன்: பிரபலம் காலமானார்

image

பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மலேசியா பாஸ்கர் காலமானார் . பாடிகார்ட், சாம்ராஜ்ஜியம், பாக்ஸர், உள்பட 250+ மலையாள படங்களிலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். திரையில் ‘Fight – Malaysia Bhaskar’ என்று பார்த்ததுமே ரசிகர்களின் கைத்தட்டல், விசில் பறக்கும் அளவுக்கு மலையாளத்தில் பிரபலமான இவர், மலேசியாவில் தமிழ் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

News October 24, 2025

ஆசிய கோப்பையை ஒளித்து வைத்த பாக். அமைச்சர்

image

ஆசிய கோப்பையை அபுதாபியில் உள்ள ACC தலைமையகத்தில் இருந்து அதன் தலைவரும், பாக்., அமைச்சருமான <<18075095>>மொஹ்சின் நக்வி<<>> இடமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. BCCI அதிகாரிகளின் சமீபத்திய அபுதாபி பயணத்தின் போது இது கண்டறியப்பட்டதாகவும், தற்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. பாக்., அமைச்சரிடம் இருந்து இந்திய வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்ததால், இந்த உரசல் நீடித்து வருகிறது.

error: Content is protected !!