News October 24, 2025
NATIONAL ROUNDUP: டெல்லியில் செயற்கை மழை

*தெலுங்கானா இடைத்தேர்தலில் 130 பேரின் மனு தள்ளுபடி *இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக மணீஷ் சர்மா நியமனம் *காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் அக்.29 செயற்கை மழை பொழிய வைக்க திட்டம் *கல்வியின் மூலம் கேரளா வளர்ச்சியடைவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு *டெல்லியை தொடர்ந்து ஹரியானா பஞ்சாப்பில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தகவல்
Similar News
News October 24, 2025
யார் வாக்குகளை பிரிக்கிறார் பிரசாந்த் கிஷோர்?

பிஹாரின் அடுத்த CM யார் என்பதை பிரசாந்த் கிஷோர் பெறும் வாக்குகள் தீர்மானிக்க உள்ளன. சமீபத்திய சர்வேயின் படி, 57% இளைஞர்கள் நிதிஷ் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். PK இல்லாவிட்டால் இந்த வாக்குகள் பெரும்பாலும் தேஜஸ்விக்கே செல்லும். ஜெகநாத் மிஸ்ராவுக்கு பிறகு 35 ஆண்டுகளாக உயர்சாதி CM இல்லாத விரக்தியில் இருக்கும் Brahmins & Upper castes, PK பக்கம் திரும்பினால் அது NDA வெற்றியை பாதிக்கும்.
News October 24, 2025
விஜய் இப்படி செய்தால் தற்கொலைக்கு சமம்: டிடிவி

EPS-ன் தலைமையை விஜய் ஏற்றுக்கொண்டால், அது தற்கொலைக்கு சமம் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்தவே EPS கூட்டணி குறித்து ஏதேதோ கூறி வருகிறார் எனவும், அவர் செய்த துரோகத்துக்கு அவர் நிச்சயம் தேர்தலில் வீழ்த்தப்படுவார் என்றும் கூறியுள்ளார். மேலும், கூவி கூவி அழைக்கும் கல்லாப்பெட்டி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்துக்கொள்ள விஜய் வருவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 24, 2025
போரின் போது தங்க நகைகளை வாரி வழங்கிய பெண்கள்

USA, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் உள்ள தங்கத்தை காட்டிலும் இந்திய பெண்களிடம் கூடுதலாக (25,488 டன்) தங்கம் இருப்பதாக X-ல் புள்ளிவிவரம் வெளியானது. இந்த புள்ளிவிவரம் தனது சிறுவயது நினைவுகளை மீட்டெடுப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். 1962 சீன போரின் போது, இன்றைய மதிப்பில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய பெண்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதை நினைவுகூர்ந்துள்ளார்.


