News October 24, 2025

மது விற்பனை குறைக்க அரசு முயற்சி: முத்துசாமி

image

தீபாவளியையொட்டி ₹790 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக அரசு மது விற்பனைக்கே முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பண்டிகை சமயங்களில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மையில் அரசு மது விற்பனை குறைக்கவே முயற்சி எடுப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Similar News

News October 24, 2025

டிரெண்ட் மாற்றம்: இனி பிராண்டுக்கு வேலை இல்லை?

image

IIT, IIM-களில் படித்தவர்களை பணிக்கு அமர்த்தும் முன்னணி நிறுவனங்களின் மனநிலை மாறி வருகிறது. ‘Blind’ செயலி நடத்திய சர்வேயில் ஆப்பிள், Nvidia, Zoho போன்ற நிறுவனங்கள், Tier 3 கல்லூரிகளில் படித்தவர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தியது தெரியவந்துள்ளது. பிராண்டட் கல்வி நிறுவனங்கள் வேலை பெறுவதை முதன்மையாக கொண்டு செயல்படுகின்றன. ஆனால், ஊழியரின் வளர்ச்சி அவரது திறமை சார்ந்தது என கம்பெனிகள் கருதுகின்றன.

News October 24, 2025

என் சாவுக்கு இவரே காரணம்.. பெண்ணின் கடைசி நிமிடம்

image

மகாராஷ்டிராவில் அரசு பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு SI கோபால்தான் காரணம் என அந்த பெண் தனது கையில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். கோபால் பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, 3 மாதங்களுக்கு முன்பே டிஜிபியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தற்கொலை செய்துள்ளார்.

News October 24, 2025

இந்திய எல்லையில் ஏவுகணை தளம் அமைக்கும் சீனா

image

திபெத்தில் உள்ள பாங்காங் ஆற்றுப்படுகையில் சீனா சத்தமே இல்லாமல், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது. வெடிமருந்து குடோன், கட்டளை, கட்டுப்பாடு மையங்கள், ஏவுகணை ஏவுதள கட்டுமானங்களை நிறுவி வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பகுதி இந்திய எல்லையில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. 2020-ல் எல்லை மோதல்கள் நடந்த இடங்களில் இப்பகுதியும் ஒன்றாகும்.

error: Content is protected !!