News October 24, 2025
மனிதர்களுக்கு இனி வேலை இருக்காது: எலான் மஸ்க்

AI டெக்னாலஜி வரவால் பல நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்துவருகின்றன. அமேசான் நிறுவனமும் 2027-க்குள் 1,60,000 பணியாளர்களை நீக்கிவிட்டு, பதிலாக ரோபோக்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த எலான் மஸ்க், ‘AI-யும் ரோபோக்களும் இனி எல்லா வேலைகளையும் எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் விரும்பினால் காய்கறிகள் வளர்ப்பது போன்ற வேலைகள் செய்யலாம்’ என X-ல் பதிவிட்டுள்ளார். உங்கள் கருத்து?
Similar News
News October 24, 2025
புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து தீவிர ஆலோசனை

Montha புயல் எதிரொலியால், தமிழ்நாட்டிற்கு மிக கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 24, 2025
விராட் கழுத்தின் மேல் கத்தி: இர்ஃபான் பதான்

ODI-யில் விராட் தொடர்ச்சியாக 2 முறை டக் அவுட்டாகி பார்த்ததே இல்லை என இர்ஃபான் பதான் கூறியுள்ளார். SM அழுத்தம் காரணமாகவே விராட் இப்படி விளையாடுகிறார் என்ற அவர், அழுத்தங்களை Ro-Ko பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், கழுத்தின் மேல் கத்தி தொங்கும்போது சிறப்பாக விளையாட முடியாது எனவும், ரன் எடுக்காத வேளையில் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News October 24, 2025
MONTHA புயல்: பெயர் எப்படி வந்தது தெரியுமா?

வங்கக்கடலில் 27-ம் தேதி உருவாகவுள்ள புயலுக்கு <<18090174>>MONTHA<<>> என இந்திய வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. பொதுவாக தாய்லாந்தில் உள்ள பெண்களுக்குதான் MONTHA என பெயர் சூட்டப்படுகிறதாம். இந்த பெயருக்கு உறுதியான மனம் கொண்டவர் என்பது பொருள். வங்கக்கடலில் உருவாகவுள்ள இந்த புயல் வலுவாக இருக்கும் என கணித்துதான் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் பிடித்திருந்தால் SHARE பண்ணலாமே.


