News October 24, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News October 24, 2025
மயிலாடுதுறை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News October 24, 2025
மயிலாடுதுறை: இலவச சட்ட உதவி வேண்டுமா?

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு 044–25342441 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 24, 2025
மயிலாடுதுறை மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

மழைக்காலங்களில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது, மின்கம்பிகள் அருந்து கிடந்தால் மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், மின்கம்பிக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர்கள் துணையோடு வெட்ட வேண்டும். இழுவை கம்பியிலோ, மின்கம்பத்திலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது, மின்கம்பத்தில் கால்நடைகளை கட்டக்கூடாது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.


