News October 24, 2025
கடலூர்: பாம்பு கடித்து பெண் பலி

வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் கலா என்கிற கலைச்செல்வி(57). இவர் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது இடது காலில் பாம்பு கடித்தது. பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலா நேற்று (அக்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 24, 2025
கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

கடலூர் மாவட்டத்தில் 37 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 24, 2025
கடலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04142-212660) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 24, 2025
கருவில் உள்ள குழந்தையை பாலினம் கண்டுபிடிக்கும் கருவி பறிமுதல்

பெண்கள் கருவில் உள்ளது என்ன குழந்தை என்று பார்க்கும் மெஷின் வைத்திருந்தது தொடர்பாக பொயனப்பாடி கிராமத்தில் செந்தில்குமார்(40) என்பவரது வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில், மருத்துவ அதிகாரிகள் குழு நேற்று (அக்.23) நேரில் சென்று சோதனை செய்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டில் இருந்த மெஷினை மட்டும் பறிமுதல் செய்து மருத்துவ குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.


