News October 24, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (அக்-23) இரவு 11 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
பழநியில் பெட்ரோல் குண்டு வீச்சு; மூவர் தப்பியோட்டம்!

பழநி சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மதுரையை சேர்ந்த ஹரிமணி (18), அவரது நண்பர்கள் முத்துக்குமார் (19), கவுதம் (19) ஆகியோர் வந்து மதுபோதையில் தகராறு செய்துள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசி, அங்கிருந்த கார் மற்றும் பேக்கரி ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 24, 2025
நத்தம் அருகே விபத்து: ஒருவர் பலி!

நத்தம் அருகே செந்துறை முடிமலை ஆற்றுப்பாலத்தில் நேற்று டூ-வீலர்கள் மோதிய விபத்தில் முருகானந்தம் (51) சம்பவ இடத்தில் பலியானார். எதிரே வந்த பகவதி (19), சசிக்குமார் (20) பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து, முருகானந்தம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 24, 2025
திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர்வு புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இன்று (அக். 23)ஆம் தேதி, இன்ஸ்டாகிராமில் “உங்கள் செல்போனுக்கு வரும் OTP & CCTV எண்களின் விவரங்களை வங்கிகள் மற்றும் UPI, கட்டண நிறுவனங்கள் கேட்க மாட்டார்கள்” என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகளை தவிர்க்க இதன் மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டது.


