News October 23, 2025

உலகை ஆளப்போகும் தொழில்துறைகள்

image

உலகம் வேகமாக மாறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், சில தொழில்துறைகள் வளர்ச்சி அடைந்து, உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நமது வாழ்கை முறையையும் மாற்றி அமைக்கும். அவை என்னென்ன தொழில்துறைகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. வேறு ஏதேனும் தொழில்துறை உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News October 24, 2025

டெஸ்டில் இருந்து விலகியது ஏன்? ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம்

image

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு முதுகுப் பிரச்சினை இருப்பதை தெரிவித்த அவர், அதன் காரணமாக தன்னால் தொடர்ந்து 2 நாள்கள் பீல்டிங் செய்ய முடிவதில்லை என கூறினார். இதனாலேயே டெஸ்டில் ஓய்வு எடுத்துள்ளதாக கூறிய அவர், ஆனால் ODI-ல் ஒரு நாள் பீல்டிங் செய்த பிறகு, மீண்டுவர நேரம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

News October 24, 2025

ரஷ்யா யாருக்கும் அஞ்சாது: புதின்

image

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க, US அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் இரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால் இந்த தடைகளுக்கெல்லாம் ரஷ்யா ஒருபோதும் அஞ்சாது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த தடைகள் ரஷ்ய பொருளாதாரத்தை பாதிக்காது என்று கூறியுள்ள அவர், எந்தவொரு அழுத்தத்திற்கும் ரஷ்ய அடிபணிய போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

News October 24, 2025

தங்கம் விலை மீண்டும் மாறப்போகிறது

image

கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,600 சரிவை கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதே. ஆனால் இன்று காலை முதலே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை இன்று மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!