News April 17, 2024

லாரி மோதி அடையாளம் தெரியாத பெண் பலி

image

வாலாஜா தாலுகா அம்மணந்தாங்கல் கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மதியம் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார் . அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்தார். வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 14, 2026

ராணிப்பேட்டை: பூட்டிய வீட்டில் வாலிபர் பிணம்

image

நந்தியாலம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் இன்று (ஜன.14) பூட்டப்பட்டிருந்த வீட்டில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் இன்று இரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

முதலமைச்சரை சந்தித்த ராணிப்பேட்டை அமைச்சர்

image

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர். காந்தி இன்று (ஜன.14) நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் உடன் ராணிப்பேட்டை மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டார்.

News January 14, 2026

ராணிப்பேட்டை: அதிமுக செயலாளர் போகி வாழ்த்து

image

போகி பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை அதிமுக மாவட்ட செயலாளர் சுகுமார் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “பழையன கழிதலும் புதியன புகுதலும் தீமைகள் ஒழிந்து, நல்வினை விளைந்திட அனைவருக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்” என தனது மண்சார்ந்த வாழ்த்துக்களை பொதுமக்களுக்கு தெரிவித்தார்.

error: Content is protected !!