News October 23, 2025
பிஹார் தேர்தலின் கிங் மேக்கர் இவர்தானா?

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் DCM வேட்பாளராக VIP கட்சி தலைவர் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டுமே இவரது கட்சி போட்டியிடுகிறது. இவர் சார்ந்த நிஷாத் சமூகம் பிஹார் மக்கள் தொகையில் வெறும் 2.5% ஆகும். ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் இந்த சமுதாய மக்கள் பரவி வாழ்வதால், பிரதான கட்சிகளின் வெற்றி, தோல்விகளை முடிவு செய்யும் முக்கிய சமூகமாக உள்ளது.
Similar News
News October 24, 2025
கூட்டணிக்காக ADMK அலையவில்லை: செல்லூர் ராஜூ

கரூர் விவகாரத்தை பயன்படுத்தி தவெகவுடன் கூட்டணி வைக்க EPS முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டிய CM ஸ்டாலினுக்கு, செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், அதிமுக எந்த காலத்திலும் கூட்டணிக்காக அலைந்ததில்லை. எங்கள் கொள்கையோடு மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம். அதேநேரம் எங்கள் காதை கடித்தால், தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
ஸ்ரீதேவி மகளுக்கு விரைவில் டும் டும் டும்மா?

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். அவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வைரலாகியுள்ளது. இன்ஸ்டாவில் Heart emoji-யுடன் ‘Save the date 29th October’ என குறிப்பிட்டு, ஜான்வி பதிவிட்டுள்ளார். இதை வைத்து அவருக்கு திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளிவருகின்றன. ஜான்வி, ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 24, 2025
வெயிட்டை குறைக்க ‘Green’ டீ குடிப்பவரா நீங்க?

எடை குறைக்க விரும்புபவர்கள், க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அது மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் என்பதால், டாக்டர்களும் க்ரீன் டீயை பரிந்துரைப்பார்கள். ஆனால், அதே நேரத்தில் இந்த டீயை அதிகம் குடிப்பதால், உடல்நல பிரச்னைகள் வரலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு, கல்லீரல் பாதிப்பு & தூக்கமின்மை ஆகிய ஏற்படலாம் என கூறப்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சே!


