News October 23, 2025
நாடு முழுவதும் SIR.. தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை இறுதி செய்யுமாறு, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. SIR நடத்துவதற்கான தேதி, அடுத்த ஒரு வாரத்தில் இறுதி செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 2026-ல் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 24, 2025
வெயிட்டை குறைக்க ‘Green’ டீ குடிப்பவரா நீங்க?

எடை குறைக்க விரும்புபவர்கள், க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அது மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் என்பதால், டாக்டர்களும் க்ரீன் டீயை பரிந்துரைப்பார்கள். ஆனால், அதே நேரத்தில் இந்த டீயை அதிகம் குடிப்பதால், உடல்நல பிரச்னைகள் வரலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு, கல்லீரல் பாதிப்பு & தூக்கமின்மை ஆகிய ஏற்படலாம் என கூறப்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சே!
News October 24, 2025
இபிஎஸ் உடன் மீண்டும் இணைகிறார்.. திடீர் ட்விஸ்ட்

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க 10 நாள் கெடு விதித்ததால், EPS – செங்கோட்டையனுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், தான் 10 நாள் கெடு விதிக்கவில்லை; என்னுடை கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக கூறி செங்கோட்டையன் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, சில நாளாக அமைதியாக இருந்த அவர், மீண்டும் EPS உடன் இணைந்து தேர்தல் & கட்சிப்பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News October 24, 2025
குல்தீப் இல்லாதது தான் தோல்விக்கு காரணம்?

நேற்றைய போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். ஆல்ரவுண்டர்களான சுந்தர் & நிதிஷ் ரெட்டி ஆகியோர் பெரிய தாக்கத்தை பவுலிங்கில் கொடுக்கவில்லை. இவர்களில் யாராவது ஒருவருக்கு பதிலாக அணியில் குல்தீப் இருந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


