News April 17, 2024
ராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனை தப்புமா?

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறையை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்தது. தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
CM வேடிக்கை பார்ப்பது வெட்கக் கேடானது: விஜய்

ஊடகவியலாளர்கள் மீது <<19004158>>கொடூரத் தாக்குதல்<<>> நடத்திய திமுக MLA மீது FIR பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் டிவி ஊடகவியலாளர்கள் மீது பழனியாண்டி தாக்குதல் நடத்திய வீடியோ அண்மையில் வெளியானது, ஆனால் அதன் பிறகும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல் CM வேடிக்கை பார்ப்பது வெட்கக் கேடானது என சாடியுள்ளார்.
News February 4, 2026
தங்கம், வெள்ளி விலை.. புதிதாக அறிவிப்பு வந்தது

சரிந்து வந்த தங்கம் விலை இறங்கிய <<19045857>>வேகத்தில் ஏறுகிறது<<>>. US டாலருக்கு மாற்றான நாணயம் குறித்த ‘De dollarisation’ கோஷமே இதற்கு காரணமாக மாறியுள்ளது. சீன அதிபரின் இந்த முன்னெடுப்பு சர்வதேச பிரச்னையாக வெடித்துள்ளது. இதனால், டாலர் நிலையாக இருந்தும் தங்கம் உயர்ந்து வருவதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் சவரன் ₹2 லட்சத்தையும், வெள்ளி கிலோ ₹5 லட்சத்தையும் எட்ட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
News February 4, 2026
துணைவேந்தர் நியமனம்.. SC தீர்ப்பு

பல்கலை., துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்க வழிவகை செய்யும் சட்டத்திற்கான தடையை நீக்கி SC தீர்ப்பளித்துள்ளது. பல்கலை.களில் கவர்னருக்கு பதில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க வழிவகை செய்யும் TN அரசின் சட்டத்திருத்தங்களுக்கு ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தடையை நீக்கியதுடன் 6 வாரங்களில் வழக்கை மீண்டும் விசாரித்து முடிக்கவும் ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.


