News October 23, 2025

திருப்பூர்: சிறப்பு வார்டு கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வார்டு உறுப்பினர் தலைமையில் வருகிற அக்.27,28,29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. இதில் பங்கேற்று பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் வினியோகம் உள்ளிட்டவைகள் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 24, 2025

திருப்பூரில் சானிட்டரி வேலைகளில் இலவச பயிற்சி!

image

திருப்பூர் ஆர் செட்டியில் முதல் முறையாக சானிட்டரி வேலைகளில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக்கான நேர்காணல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (28.10.25) அன்று நடைபெற உள்ளது. இதில் உணவு, சீருடை, பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் அதிக லாபம் தரக்கூடிய இந்த பயிற்சியில் சேர 94890-43923 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News October 24, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து காவலர்களின் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். மேலும் உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 100 அழைக்கவும்!

News October 23, 2025

எறிபந்து போட்டிக்கு தனியார் பள்ளி மாணவன் தேர்வு!

image

தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெருந்துறையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியின் மாணவன் பவின் கலந்து கொண்டு தேசிய அளவில் நடைபெறும் எறிபந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!