News October 23, 2025
அனைத்து பள்ளிகளிலும்.. பறந்தது புதிய உத்தரவு

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 5 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என HM – களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
பிஹார் தேர்தலில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: PM

பிஹாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து வளர்ச்சி பணிகளில் புதிய உத்வேகம் பிறந்ததாக, தேர்தல் பரப்புரையில் PM மோடி தெரிவித்துள்ளார். RJD-யின் மோசமான ஆட்சி குறித்து இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பேசுவார்கள் என்றும், பாஜகவினர் இளைஞர்களிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிஹார் தேர்தலில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
News October 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 24, ஐப்பசி 7 ▶கிழமை:வெள்ளி ▶நல்ல நேரம்:12:15 AM – 1:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்:3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
News October 24, 2025
எடையை குறைக்க எது பெஸ்ட்.. ஓடுவது அல்லது நடப்பது?

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி பெஸ்ட்டா? ஓடுவது பெஸ்ட்டா? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். உடலை ஃபிட்டாக பராமரிக்க விரும்புவோர் நடைபயிற்சி செய்யலாம். ஒரு நாளைக்கு 2 கி.மீ தூரம் நடப்பது high BP மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும். அதே நேரத்தில், உடல் எடையை குறைக்க ஓடுவதுதான் பெஸ்ட். இது அதிக கலோரிகளை எரிப்பதுடன், உடல் ஆற்றலையும் மேம்படுத்துகிறது. நீங்க என்ன பண்ணுவீங்க?