News October 23, 2025

நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

Similar News

News October 24, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 23, 2025

நாகைக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் நியமனம்

image

தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களுக்கு பருவமழையை முன்னிட்டு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை தமிழக அரசு நியமித்து உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அ.அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாகை மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியருடன் இணைந்து மேற்கொள்வார்.

News October 23, 2025

நாகை: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே நேற்று மாலை சுமார் 47 வயது மதிக்கத்தக்க அடையாளம் ஆண் சலடம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!